Site icon Madawala News

VIDEO : உணவுப் பயிர்களை சேதமாக்கும் குரங்கு உள்ளிட்ட விலங்குகளை விரட்ட தானியங்கி சாதனம் இலங்கை பொறியியலாளர்கள் குழுவால் கண்டுபிடிக்கப் பட்டது.

நாட்டின் பல பகுதிகளிலும் விலங்குகளினால் பயிர்களுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படுகின்றன.

பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் குரங்கு, மந்தி, அணில் மற்றும் காட்டு யானை ஆகியவை முதன்மையானவை.

குறிப்பாக கேகாலை மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் அந்த மாவட்ட மக்கள் தமது பயிர்களை காப்பாற்ற முடியாமல் நிர்க்கதியாகியுள்ளனர்.

அதற்கமைய, மேற்படி பிரச்சினைக்கு பொறியியலாளர் ஆனந்த தேவசிங்க மற்றும் இளம் பொறியியலாளர்கள் குழு தற்காலிக தீர்வை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விலங்குகளை விரட்டும் வகையில் ஒரு தானியங்கி சூரிய சக்தியில் இயங்கும் மின்னணு சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் சமீபத்தில் புலத்கொஹுபிட்டிய, வாகொல்ல பகுதியில் சோதனை செய்யப்பட்டது.

Exit mobile version