Site icon Madawala News

தேர்தலில் படுதோல்வியடைந்த தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க சூழ்ச்சி செய்கின்றனர்

தேர்தலில் படுதோல்வியடைந்த தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க சூழ்ச்சி செய்கின்றனரென வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சி உள்ளது. அனைத்து சூழ்ச்சிகளையும் சட்டத்தின் ஊடாக தோற்கடிப்போம் என்றும் குறிப்பிட்டார். அரிசி, தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர், அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரிசி உற்பத்தியாளர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதோ அல்லது அவர்களின் தொழிற்றுறையை கேள்விக்குள்ளாக்குவதோ எமது நோக்கமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்து அவற்றை அரிசியாக்குவதற்கான புதிய திட்டங்களை அரச கட்டமைப்பில் முன்னெடுப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்களின் மாபியாக்களுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை என்றார்.

Exit mobile version