சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வித்தகைமை தொடர்பில் பொய் கூறியுள்ளமை பாராளுமன்ற இணையதளம் உறுதிப்படுத்தியுள்ளதாக சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
அவரின் பெயரை கலாநிதி என குறிப்பிட்ட பாராளுமன்ற இணையதளம் தற்போது அதனை நீக்கியுள்ளதாக அவர் கூறினார்.
சபாநாயகர் உடனடியாக பதவி விலகி பொருத்தமான் ஒருவரை சபாநாயகரை அரசு நியமிக்க வேண்டும் என அவர் கூறினார்.