News
ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் பாடசாலை மாணவன் அப்துல் மலிக்கினால் உருவாக்கப்பட்ட அதிவலுசக்தி மிக்க ஒலிபிரப்பாக்கி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தது – மனமார்ந்த வாழ்த்துகள்.

All island school Inventors competition/Exhibition 2024
இலங்கை விஞ்ஞான முன்னேற்ற கழகம்/சங்கம் மற்றும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு இணைந்து நடாத்திய அகில இலங்கை பாடசாலை புத்தாக்குனர் போட்டி மற்றும் கண்காட்சி நேற்றும் இன்றும் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் இடம்பெற்றது…
இதில் ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலையின் மாணவர்களான அப்துல் மலிக் மற்றும் சியாஸ் தம் கண்டுபிடிப்புகளை முன்வைத்தனர்..
இதில் தரம் 10ல் கற்கும் அப்துல் மலிக்கினால் காண்பிக்கப்பட்ட அதிவலுசக்தி மிக்க ஒலிபிரப்பாக்கி (High power speaker Amp) தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தது..
ஆல்ஹம்துலில்லாஹ்….
அஹஸ்வெவ M.Ashraf,M.L.F.Rizana ஆகியோரின் புதல்வரான இவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சல்மான் –




