நாய்களைப் போல் குரங்குகளுக்கு கருத்தடை செய்வது வெற்றி அளிக்காது. (ஹிமாச்சல் பிரதேசத்தில் இடம்பெற்ற கதை ஒரு எச்சரிக்கை)

இந்தியாவின் நாகப்பாம்புகள், இலங்கையின் குரங்குகளை கடிக்குமா?
நீண்ட காலத்திற்கு முன்பு, ஆங்கிலேயரின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியாவில் பாம்புக் கடி பாரிய பிரச்சினையாக இருந்தது.
நாகப்பாம்புகள் (cobras) கடித்ததால் பலர் இறந்தனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக அன்றைய ஆங்கிலேய அரசாங்கம், பண வெகுமதி முறையை முன்மொழிந்தது.
கொன்று கொண்டுவரும் ஒவ்வொரு நாகப்பாம்புக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இது ஒரு நல்ல தீர்வாகத் தோன்றியது,
ஆனால் பின்னர் மக்கள் நாகப்பாம்புகளை பிடித்துக் கொடுத்தாலும் நாகப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசாங்கம் உணர்ந்தது.
காரணம், சிலர் நாக பாம்புகளை வளர்ப்பதை தொழிலாக ஆரம்பித்தனர். வளர்ந்த நாக பாம்புகளை அரசிடம் ஒப்படைத்து சன்மானம் பெற ஆரம்பித்தனர். இது ஒரு குடிசை டைத்தொழிலாக மாறியது.
இதனை அறிந்த அரசு திடீரென ரொக்க ஊக்கத்தொகை முறையை நிறுத்தியது.
இதனால் வளர்ப்பவர்கள் தங்கள் வளர்ப்பு வீடுகளில் அவற்றை வைத்திருக்க எந்த நிதியும் கிடைக்கவில்லை.
இதன் விளைவாக, அவர்கள் நாகப்பாம்புகளை ஒரு திறந்த சூழலுக்கு விடுவித்தனர், இது விரைவாக நாகப்பாம்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. பிரச்சனை முன்பை விட மோசமாகிவிட்டது. இது “கோப்ரா விளைவு” (“cobra effect”) என்று அழைக்கப்படுகிறது.
நல்ல நோக்கத்துடன் ஒரு தீர்வைக் கொண்டு வருகிறீர்கள், ஆனால் அதன் விளைவு அசல் பிரச்சனையை விட மோசமான எதிர்மறையான விளைவுகளுக்கு வழி வகுக்கிறது.
இலங்கையில் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளின் எண்ணிக்கையை குறைக்க ஆண் குரங்குகளை பிடித்து கருத்தடை (சத்திரசிச்சை) செய்யும் முறையை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குரங்குகளை பிடிக்க பயிற்சி, சன்மானங்கள் வழங்கப்படலாம். இது மற்றுமொரு MonkeyEffectஐ தோற்றுவிக்காவாட்டால் சரிதான்.
#ziyadaia
ஏற்கனவே பாதையில் திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய பல மில்லியன் செலவழித்தும் அது ஒரு Failure. இங்கு மரம் விட்டு மரம் தாவும் குரங்குகளை பிடிக்க மேலும் பல மில்லிய செலவழிக்க வேண்டும். ஆனால் பயன்?
நாய்களைப் போல் குரங்குகளுக்கு கருத்தடை செய்வது வெற்றி அளிக்காது. ஹிமாச்சல் பிரதேசத்தின் கதை ஒரு எச்சரிக்கை.
இந்தியாவின் Agra மற்றும் Himachal பிரதேசங்களில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வர 2006ம் ஆண்டளவில் குரங்குகளுக்கு கருத்தடை செய்ய இந்திய அரசாங்கம் முடிவு செய்து பல கோடி ரூபாய்களை செலவு செய்து 10 லட்சத்துக்கு மேற்பட்ட குரங்குகளுக்கு கருத்தடை செய்தது.
ஆனால் கிணறு வெட்ட பூதம் வெளியான கதையாய் ஏற்கனவே மனிதர்களுக்கு ஓரளவு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த குரங்குகள் இந்த கருத்தடைக்காக குரங்குகளை பிடித்து மனிதர்கள் கையாளுவதை அவதானித்து வழமையை விட மிகவும் மோசமான நடத்தையை காண்பிக்க ஆரம்பித்தன. சாதாரணமாக வீதியில் செல்லும் மக்களையும் தாக்க ஆரம்பித்தன.
(Planet of the Apes)
தெரு நாய்கள் போல் அல்லாது குரங்குகள் மனிதர்களைப் போன்ற “சமூக நடத்தையும், கூட்டமாக வாழும் தன்மையையும்” கொண்டவை.
அவற்றின் அந்த சமநிலை குழப்பப்படும் போது அவை Aggressiveவாக மாறி எதிர்பார்த்ததை விட அதிகமாக மனிதர்களை தாக்க ஆரம்பித்தது.
இறுதியில் இந்திய அரசாங்கம் செய்ய வழி இன்றி குரங்குகளை பயிர்களை நாசமாக்கும் “பூச்சிகள்” எனும் வகையறைக்குள் கொண்டு வந்து கொல்லுவதற்கான முடிவை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தியது.
“The state has declared monkeys as “vermin” under the Wildlife Protection Act in 2017 in 10 districts, allowing for their culling.”
இலங்கையிலும் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடைமுறைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக வரும் செய்திகள் வரலாற்றிலிருந்து பாடம் படிக்க தவறிய தையே காண்பிக்கிறது.
–Ziyad Aia–

