மஹிந்தவின் பாதுகாப்பை குறைத்தது ஏன்? டி.வி.ச்சானக்க கேள்வி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.ச்சானக்க இன்றைய சபை அமர்வின் போது கேள்வி எழுப்பினார்.
மஹிந்த ராஜபக்ஷவின் இரானுவ பாதுகாப்பை நீக்குவதால் 30 கோடி மிச்சமாகுமா ? இல்லை .. இராவனு சிப்பாய்கள் முகாம்களுக்கு செல்வார்கள். யுத்தம் இடம்பெற்ற போது ஒரு நிமிடத்திற்கு 30 கோடி ரூபா செலவிடப்பட்டது. அந்த யுத்தத்தை நிறுத்திய ஜனாதிபதிக்கு வருடத்திற்கு 30 கோடி செலவிட முடியாதா என அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு சமளவிலான பாதுகாப்பை வழங்கும் தீர்மானம் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டதென அவர் வினவியுள்ளார்.
பாதுகாப்பை குறைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை நீக்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
முப்படை பாதுகாப்பு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. கைதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அளவு கூட நாட்டை காப்பாற்றிய தலைவருக்கு வழங்கப்படவில்லையென து பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.ச்சானக்க குற்றம் சுமத்தியுள்ளார். 60 சாதாரண பொலிஸ் அதிகாரிகளால் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் ஆனந்த விஜேபால, அச்சுறுத்தல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் பின்னரேயே பாதுகாப்பு குறைப்பு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

