News
வேறொரு நாட்டில் குற்றமிழைத்தவரை கைது செய்ய வெளிவிவகார அமைச்சினூடாக தகவல் கிடைக்கவேண்டும்.

இஸ்ரேல் போர் குற்றவாளி கேல் ஃபெரன்புக், தற்போது இலங்கையின் கொழும்பில் இருப்பதாக பெல்ஜியத்தைச் சேர்ந்த ஹிந்த் ரஜப் அறக்கட்டளை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் குறித்த நபர் வெளிநாட்டில் செய்த சட்ட விரோத செயலுக்கு எமது நாட்டில் கைது செய்யவது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
வேறு ஒரு நாட்டில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவர் எமது நாட்டிற்குள் பிரவேசித்திருந்தால் அவரை கைது செய்ய வெளிவிவகார அமைச்சு ஊடக பொலிஸாருக்கு அறிவித்தல் கிடைக்க வேண்டும் என கூறினார்.
இது தொடர்பில் இதுவரை எந்த அறிவுருத்தலும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

