மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஆண் மற்றும் பெண் மீது துப்பாக்கி சூடு

மித்தெனிய, கல்பொத்தயாய – ஜுலம்பிட்டிய வீதியில் 6வது மைல் கட்டைக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தம்பதியர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் போது குறித்த நபர் காயமடைந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜுலம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஆண் மற்றும் 40 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளனர். தம்பதியினர் முதலில் மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அன்றைய தினம் கடையை மூடிவிட்டு வீடு திரும்பிய தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை, அதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் குற்றம் நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

