News
முட்டை விலை குறைந்தாலும், முட்டை ஆப்பம் , முட்டை ரொட்டி விலை குறையாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

முட்டை விலை குறைந்தாலும், முட்டை ஆப்பம் , முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முட்டையின் விலை 25 – 30 ரூபாவிற்கு கீழ் குறைந்துள்ள போதிலும் முட்டாப்பம் மற்றும் முட்டை ரொட்டி ஆகியவற்றின் விலை முன்பைப் போலவே இருப்பதாகவும், முட்டை விலை அதிகரிக்கும் போது இந்த உணவுப் பொருட்களின் விலை உடனடியாக உயர்த்தப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு முட்டையின் விலை 58 முதல் 60 ரூபாய் வரை இருந்தபோது, முட்டை ஆப்பம் மற்றும் முட்டை ரொட்டி 130 முதல் 140 ரூபாய் வரை உயர்ந்தது.

