News
மஹிந்த ராஜபக்ஷ அரசு கூட ரோஹின்யா முஸ்லிம்களை நாட்டில் இருந்து வெளியேற்றவில்லை..

மஹிந்த ராஜபக்ஷ அரசு கூட ரோஹின்யா முஸ்லிம்களை நாட்டில் இருந்து வெளியேற்றவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹின்யா முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற போவதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளதாக கூறிய அவர்,
கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலும் இலங்கையில் ரோஹின்யா முஸ்லிம்கள் தஞ்சமடைந்திருந்த போது மஹிந்த அரசு அவர்களை இங்கு தங்க இடம்கொடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுடன் அவர்கள் விரும்பிய நாடு ஒன்றில் குடியேற இடம் விட்டது.
இனவாத மதவாத மிலேச்ச அரசு என அனுர குமார கூறிய மஹிந்த ராஜபக்ஷ அரசே அவ்வாறு நடந்து கொண்ட போது இந்த அரசு இவ்வாறு நடப்பது ஆச்சர்யமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

