News

ரோகிங்யா அகதிகளை நாடுகடத்தும் மனிதாபிமானமற்ற நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் -சஜித்

இலங்கை அரசாங்கம் ரோகிங்யா புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக்கூடாது என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களைநாடு கடத்துவது சர்வதேச பிரகடனங்கள் உடன்படிக்கைகளிற்கு முரணாண விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த முயல்கின்றதா என்பதை நாங்கள் அறியவேண்டும், என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் அவ்வாறானதொரு மனிதாபிமானமற்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் அவர்களை திருப்பி அனுப்புவது சர்வதேச மனித உரிமை சட்டத்தினை மீறும் செயல் என தெரிவித்துள்ளார்.

ரோகிங்யா இனத்தவர்கள் பாரபட்சம் வன்முறைகள் போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர் என்பதை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button