“அரசாங்கத்தால் பாடசாலை கற்றல் உபகரணங்களுக்கான VAT வரியை இல்லாமலாக்குவதற்கான பொருத்தமான காலம் இதுவே.”

“குறிப்பிட்ட சிலருக்கு அஸ்வசும 6000 ரூபா கொடுப்பனவு அரசாங்கம் வழங்குவதுகூட பாரியளவான சுமையை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குறைக்காது.”
“பாடசாலை கற்றல் உபகரணங்களுக்கான வரிச்சுமையால் ஏற்படும் உளப்பாதிப்புக்களால் மாணவர்களின் பாடசாலை இடைவிலகலில் கூட தவிர்க்க முடியாத துரதிஷ்டமான நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் இருக்கின்றன.”
இந்நிலையால் கற்றல் தகமைகளை வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக மாத வருமானத்தை எவ்வாறு அதிகரித்துக் கொள்ளலாம் என்ற நிலையில் சிறுவர்கள் வேலைகளுக்கு அமர்த்தப்பட்டு சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் அதிக வாய்ப்பும் இருக்கிறது.
NPP அரசாங்கம் இதுவரையில் தாங்கள் தேர்தல்காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவற்றியதாக எம்மால் அறியமுடியவில்லை என்றாலும் NPP யின் தேர்தல் கொள்கைப் பிரகடனத்திலுள்ள பாடசாலை கற்றல் உபகரணங்களுக்கான VAT வரியை இல்லாமல் செய்தாவது தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு ஆருதலை வழங்கலாம்.
இவ்வாண்டுக்கான இறுதித் தவணைக் காலப்பகுதியில் தற்போது மாணவர்கள் இருக்கிறார்கள் அடுத்த மாதமளவில் முதலாந் தவணைக்காக புதிய கற்றல் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கவுள்ள மாணவர்கள், இதற்காக தங்களது கற்றல் நடவடிக்கைகளுக்கான பாடசாலை உபகரணங்களுக்கான வரிச் சுமையானது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாரிய உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்பதால் அரசாங்கம் பாடசாலை கற்றல் உபகரணங்களுக்கான விரியை இல்லாமல் செய்வதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்கான பொருத்தமான காலம் இக்காலப்பகுதியே ஆகும்.
பாடசாலை உபகரணங்களுக்கான 18% வரிச்சுமை என்பது தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்குள்ளான வாழ்வாதார பொருளாதாரச் சுமைக்குள் பெற்றோர்களால் ஈடுசெய்து கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. அதிலும் ஒரே குடும்பத்திலிருந்து கற்றல் நடவடிக்கைகளைத் தொடருகின்ற அதிகமான பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்திலுள்ள பெற்றோர்களின் நிலை எவ்வாறானது? என்பதை நாம் ஊகித்து விளங்கியும் கொள்ளலாம்.
“பாடசாலை உபகரண கொள்வனவிற்காக நூற்றுக் கணக்காக தேவைப்பட்ட பணத்தேவை தற்போது வரிவிதிப்பின் பிரகாரகம் ஆயிரங்களாகவும், இலட்ச்சங்களாகவும் தேவைப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்”. இவ்வாறான கொள்வனவுச் செலவை எல்லோராலும் ஈடு செய்ய முடியாது என்பதே யதார்த்தமாக இருக்கின்ற இத் தருணத்தில் அரசாங்கம் உடனடியாக பாடசாலை உபகரணக்களுக்கான வரியை இல்லாமல் செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
MLM.சுஹைல் (ஆசிரியர்)

