6 மில்லியன் ரூபா பெறுமதியான 455 வேப்பர் E சிகரட்டுக்களுடன் பெண் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 6 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு இலத்திரனியல் சிகரெட்டுகளை (வேப்பர் E சிகரட் ) கடத்திய குற்றத்திற்காக 32 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை, நம்புபமுனுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர், பயண முகவராக பணிபுரிந்து வருகிறார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-315 இல் அவர் நேற்று மாலை 7 மணியளவில் இலங்கை வந்தடைந்தார்.
இதற்கிடையில், அந்த பெண் 455 இ-சிகரெட்டுகளை இரண்டு பைகளில் மறைத்து வைத்திருந்தது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் இ-சிகரெட்டுகளை நாட்டிற்கு கொண்டு வந்த பயணி மேலதிக விசாரணைகளுக்காக நைகந்தவிலுள்ள போதைப்பொருள் உபதவிர்ப்பு அலுவலகத்தில் அதிகாரிகளிடம் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

