News

அரிசி தட்டுப்பாடு குறித்து அரசு முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால்,அரிசி விலை பாரிய அளவில் அதிகரிக்கும்..

அரிசி தட்டுப்பாடு தொடர்பாக அரசு முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால், தற்போதைய சிவப்பு அரிசிக்கான தட்டுப்பாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கலாம் முன்னாள் விவசாய திணைக்கள பணிப்பாளர் கே. பி. குணரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இப்போது மீண்டும் சிவப்பு அரிசி வளர்க்க நேரம் இல்லை. இதே நிலை நீடித்தால் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் வரை இந்த அரிசி தட்டுப்பாடு நீடிக்கும்.

இப்போது அரிசி இறக்குமதியை நிறுத்த அரசு முயற்சிக்கிறது. அரசாங்கம் 100,000 மெற்றிக் தொன் அரிசியை கொண்டு வந்தாலும் 10 முதல் 11 நாட்களுக்கு இந்த நாட்டு மக்களால் நுகரப்படும்.

இந்த அரிசி தட்டுப்பாடு குறித்து அரசு முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் நாட்டு அரிசியின் விலை 330-350 ரூபாய் வரையும், சம்பா அரிசியின் விலை 380-400 ரூபாய் வரையும். 450 ரூபா வரை கீரி சம்பா விலை உயரும்.சிவப்பு அரிசியை காணவும் கிடைக்காது என கூறினார்.

Recent Articles

Back to top button