News
அடுத்ததாக அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி அதற்கு அடுத்ததாக ஜப்பான் செல்கிறார்.

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தனது அடுத்த வெளிநாட்டு விஜயமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த குறிப்பிடுகிறார்.
அதன் பின்னர் ஜனாதிபதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, பிராந்திய வல்லரசுகளாக இந்தியா மற்றும் சீனாவுக்கு விஜயம் செய்ததாகவும் அவர் கூறுகிறார்.
உலகின் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த விஜயங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


