காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த zeena பஸ், செருநுவர பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இன்று (20) அதிகாலை, சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள சேருநுவர கந்தளாய் வீதியில் சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று விபத்தை எதிர்நோக்கி உள்ளது.
கனமழை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் சுமார் 49 பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்து காரணமாக பஸ் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
பேருந்தை ஓட்டுநர் கவனக்குறைவாக ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

