News

வரி மாறும்.. புதிய வாகனங்களின் விலை அதிகரிக்கும்..- விஜித ஹேரத்

வாகன சந்தை மீண்டும் திறக்கப்படும் போது எதிர்காலத்தில் கிடைக்கும் வெளிநாட்டு கையிருப்பின் அளவை கருத்தில் கொண்டு வாகனங்களை இறக்குமதி செய்வது பல கட்டங்களாக முறையாக மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் திரு.விஜித ஹேரத் தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்கான வரி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், வாகனங்களை இறக்குமதி செய்வது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும் அவர் கூறினார்.

அதன் படி, வரி விகிதங்கள் அதிகரிப்புடன், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையும் உயரும் என கூறிய அவர் சில வாகனக்களின் விலைகள் குறையலா ம் எனவும் கூறினார்.

தெரன தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் இதனை கூறினார்.

Recent Articles

Back to top button