News

பாரியளவிலான ஆலை உரிமையாளர்கள் பலர் நெல்லை பதுக்கிவைத்துள்ளதாக கூறுவது பொய்யானது

பாரியளவிலான ஆலை உரிமையாளர்கள் பலர் நெல்லை பதுக்கிவைத்துள்ளதாக கூறுவது பொய்யானது என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் வருடாந்த அரிசி தேவை மற்றும் நெல் உற்பத்தி தொடர்பான அரசாங்கத்தின் தரவுகளில் கடுமையான திரிபு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக இம்முறை அரிசி இறக்குமதியில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் தாங்கள் சேகரிக்கும் இருப்புகளை ஒரு பருவத்தில் இருந்து அடுத்த பருவத்திற்கு முறையாக அரைத்து சந்தைக்கு விடுகின்றனர் என்றார்.

இந்த பருவத்தில் இருந்து அரிசிக்கான அதிகபட்ச விலை அதே நிலையிலேயே பேணப்படும் எனவும், எதிர்காலத்தில் நெல்லுக்கான உத்தரவாத விலை பெயரிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலையில் அரிசியை வாங்கவும், விற்கக்கூடிய விலையில் அரிசியை வாங்கவும் ஆலை உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், அரசிடம் பதிவு செய்யாமல் பதுக்கி வைப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தை தாம் கடுமையாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மில் உரிமையாளர்களும் அரசின் அரிசி கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இணைந்து, சந்தைக்கு சலுகை வழங்க வேண்டும் என்றார்.

அரிசி ஆலையை மூடிவைப்பதை விட 2 ரூபா நட்டத்திற்கு அரிசியை சந்தைக்கு அனுப்பவது அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இலாபகரமானது என தனது அரிசி ஆலை உரிமையாளர் நண்பர் ஒருவர் கூறியதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் வங்கிக்கு வட்டி செலுத்த வேண்டும், சம்பளம் வழங்க வேண்டும், டிரான்ஸ் போமர்களுக்கு வாடகை செலுத்த வேண்டும் என கூறினார்.

Recent Articles

Back to top button