News

தேங்காய்ப் பால், தேங்காய் சம்பல் போன்றவற்றால் தேங்காய் வீண்விரயமாகிறது என்று கைத்தொழில் பிரதியமைச்சர் சொன்னதில் என்ன பிழையுள்ளது ?

தேங்காய் சம்பல் வீண்விரயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடியோ அதிகளவில் வைரல் ஆகியுள்ளது.

வழமைபோல விடயங்களை நுனிப்புல் மேய்ந்துவிட்டு கோமாளிக்கூத்தாடும் செயார் கான்கள் அதை செயார் செய்து சுய இன்பம் காண்கிறார்கள்.



அதிகளவில் தேங்காய் நுகர்வோர் பட்டியலில் உலகில் முதலிடத்தில் இருப்பது பிலிப்பைன்ஸ் இவர்கள் தலைக்கு வருடாந்தம் 125 தேங்காய்கள் நுகர்கிறார்கள்
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது இந்தோனேசியா. அட இரண்டாம் இடத்தை விட்டு விட்டோமே. இரண்டாம் இடம் வேறு யாரும் இல்லை அது நம்ம இலங்கை தான் தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின் படி இலங்கையில் அண்ணளவாக 110 தேங்காய்கள் நுகர்கிறோம். திணிவு அடிப்படையில் ஒவ்வொரு இலங்கையரும் சராசரியாக 55-60 கிலோ கிராம் Coconut Meat நிறையை உட்கொள்கிறோம். 90 சதவீதமான தேங்காய் தேங்காய் பாலாக நுகரப்படுககறது.



அதேவேளையில் பாரம்பரியமாக கையால் பிழிந்து நாம் தேங்காய் பால் எடுக்கிறோம் எஞ்சிய தேங்காய் பூவை வீசி விடுகிறோம்.
இந்த முறையில் தேங்காய் பால் Extraction Efficiency வெறும் 25 சதவீதம். இதற்கு அடுத்து blender அரைக்கும் முறையில் இது 70 சதவீதம் ஆனால் நவீன Industrial Extraction Methods மூலம் 99 சதவீதமான பாலை எடுக்க முடியும். அல்லது பூவை வீசாமல் நாம் அதை கறிக்குள் coconut paste ஆக போடுவதால்
100 சதவீதம் பிரயோசனம் பெறலாம்.


ஏறத்தாழ 50 கிலோ தேங்காய் மீட் இலங்கையில் பாலுக்காக பாவிக்கப்படுகிறது இதன் போது 75 சதவீதம் பால் எடுக்க படாமலே குப்பையாக வீசப்படுகிறது. இது தலைக்கு சராசரியாக 37+ Kg. இது மிகப்பெரிய வீண்விரயம் இதனாலேதான் தேங்காய் பூவை வீசாமல் சம்பல் செய்ய வேண்டும் என்று அறிவுரை சுகாதார திணைக்களம் வழங்கி வருகிறது.


ஆனால் அவ்வாறு சம்பல் செய்யும் போது சுவை அதிகம் இல்லை என்ற காரணத்துக்காக அதை அதிகம் பேர் விரும்புவதில்லை. இலங்கை  பசும்பால் போல தேங்காய் பாலையும் திரவமாக, சந்தையில் பெறும் வகையில் Industrialization ஆகுமாயின் இந்த வீண்விரயம் தடுக்கப்பட்லாம்.

அதுபோல துருவல், துண்டான (Desiccated Coconut) தேங்காய் பால்மாவாக நுகர்ந்தால் தேங்காய் வீண்விரயம் பாரியளவு தவிர்க்க முடியும்.


ஊர்ல எவ்வளவு பசும்பால் இருக்கிற போதும் அங்கர் பால்மாவும் இவ்வளவு மீன் இருக்கிற நாட்டில டின்மீனும் இறக்குமதி செய்யுற நமது மனநிலை உள்நாட்டு உற்பத்தி கைத்தொழிலாக தேங்காய் பால்மா போல ஏனைய தேங்காய் உணவு பொருட்கள் கைத்தொழில் மயமவதை யோசிக்கும் மனநிலையில் இல்லை.  இப்படி செய்வதால் 110 தேங்காய் அல்ல இலங்கையில் 35-40 தேங்காய்கள் போதும். 



Hypothetically எமது வீண்விரயங்களை தவிர்த்து உலக சந்தையில் அதிக கிராக்கி நிலவும் தெங்கு உணவுகளாக மீதி 60 தேங்காய்களை ஏற்றுமதி வருமானம் கிடைக்கும் இதன் மூலம் ஆகக் குறைந்தது 50 டொலர்கள் கிடைக்கும் இது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பு ஆகும்.

அதோட மட்டும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான தொழில் வாய்ப்பும் இலங்கையில். உருவாகும்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. நாமல்லாம் அந்தளவுக்கு சிந்திக்கிற ஆக்களா.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button