News
100 சதவீதம் செயல்திறனைக் கொண்டு HIV தடுப்பு மருந்து கண்டுபிடிக்கபட்டது ; ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு
உலகம் முழுவதும் தற்போது எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், தென்னாபிரிக்கா அதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாபிரிக்காவின் கேப்டவுன் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எச்.ஐ.வி. தடுப்பு மருந்துக்கான ஆய்வை நடத்தினர்.
அதன்போது கண்டுபிடிக்கப்பட்ட குறித்த தடுப்பு மருந்தானது 100 சதவீதம் செயல்திறனைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
6 மாதத்துக்கு ஒன்று என ஊசி மூலமாக செலுத்திக்கொள்ள வேண்டிய இந்த மருந்து, எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து விரைவில் குணமடையச் செய்யும் சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்