மடவளையின் அவசர தேவையாக உள்ள இன்னுமொரு மக்பராவின் [மையவாடி] காணி கொள்வனவுக்கு நிதி உதவி கோரல்..

மடவளைக்கு இன்னுமொரு மக்பராவின் [மையவாடி] தேவை ஏற்பட்டிருக்கும் நிலையில்…..
✅ மடவளை ஜாமிஉல் கைராத் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் மையவாடி கொள்வனவு திட்டம் 2025. Madawala Muslim burial ground purchasing project 2025.
Jamiul khairaath jumma mosque, madawala bazaar.
எமதூர் அண்ணளவாக 5000 க்கு மேற்பட்ட குடும்பங்களையும் 20,000 க்கும் அதிகமான மக்கள் தொகையையும் கொண்டிருக்கும் நிலையில், மடவளை ஜாமிஉல் கைராத் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் பராமரிப்பில் பள்ளிவாசலுக்கு இரு பக்கத்திலும் இருக்கும் மையவாடியில்தான் இதுவரைக்கும் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய சூழ்நிலையில் அந்த இடத்தில் தொடர்ந்தும் அடக்கம் செய்வதில் சிக்கல்கள் சிரமங்கள் இருப்பதாலும் ஏற்கனவே அடக்கம் செய்த ஜனாசாக்கள் உக்கி போவதற்கு காலம் எடுக்கும் என்பதாலும் மக்கள் தொகையின் அதிகரிப்பை கருத்தில் கொண்டும் தூரநோக்குடன் மாற்றீடாக
அவசரமாக இன்னுமொரு அடக்கஸ்தலம் தேவைப்படும் நிலையில்,
தொடர்ந்து வந்த பல நிர்வாகங்களின் நீண்டகால திட்டமாக இருந்த இந்த புதிய மையவாடி கொள்வனவு செய்யும் திட்டம் தற்போதைய (A.W.M. நாஜிம் ஹாஜியார் தலைமையிலான) நிர்வாகிகளின் முயற்சியில் ஊருக்குள்ளேயே 150 perches கொண்ட தகுதியானதொரு இடம் நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கு முடிவாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
அந்த வகையில்,
150 perches காணியை ஒரு perches Rs. 2,50,000/= என்ற கணக்கில் பேசப்பட்டு பின்னர் காணி உரிமையாளர்களினால் தனது தந்தை மர்ஹூம் Subair ஹாஜியார் என்ற பெயரில் சதகத்துல் ஜாரியாவாக ஒரு perches க்கு Rs. 20,000/= தள்ளுபடி செய்து ஒரு perches க்கு Rs. 2,30,000/= என்ற கணக்கில் முடிவானது. தள்ளுபடி செய்த தொகை Rs. 3,00,0000/= மாகும். (முப்பது இலட்சம்). அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக.
எனவே 150 perches காணிக்கு கொடுக்க வேண்டிய (2,30,000×150) Rs. 34,50,0000/= (மூன்று கோடியே நாற்பத்து ஐந்து இலட்சம்) உட்பட அதை எழுதும் செலவு மற்றும் துப்புரவு செய்யும் செலவு என்பதோடு காணியை சுற்றி பாதுகாப்பு மதில் அமைக்கும் செலவுகளும் இருப்பதால் காணியின் தொகையை விட கூடுதலான பணம் தேவைப்படுகிறது.
எனவே சதகத்துல் ஜாரியாவான இந்த மறுமைக்கான மூலதனத்தை ஊராரிடம் வசூல் செய்வதற்கான ஒரு கலந்துரையாடலை மையப்படுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (26-01-2025)
மடவளை ஜாமிஉல் கைராத் பள்ளி நிர்வாகத்தின் தலமையில் இஷா தொழுகையின் பின்னர் மஹல்லா பள்ளிவாசல்களின் (தக்கியாக்களின்) பிரதிநிதிகள், ஊரிலுள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடி வசூலுக்கான முன்னெடுப்புகளை கீழ்கண்ட முறையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
▪️வெளிநாட்டில் தொழில் புரியும் மற்றும் வாழும் எமது ஊரைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நலன்புரி சங்கங்களிடம் வசூல் செய்தல். குறிப்பாக;
*MADAWALA BAZAAR WELFARE SOCIETY – UK (MBWS – UK)
*MADAWALA WELFARE SOCIETY – JAPAN
*MADAWALA WELFARE ASSOCIATION – QATAR
▪️ஊர் தனவந்தர்களை தலைமை நிர்வாகிகள் பிரத்தியேகமாக அணுகுதல்.
▪️கலந்துரையாடலுக்கு வந்திருந்த அனைவரையும் மஹல்லா ரீதியாக அணி அணியாக பிரித்து ஊரில் பொது வசூல் செய்தல்.
.
▪️விரும்பியவர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட சதுர அடிக்கான தொகையை வழங்கல்.
இதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02-02-2025) ஊரில் மஹல்லா ரீதியாக பொது வசூல் செய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, மடவளையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31-01-2025) ஜும்ஆ குத்பா உரைகள் சதகத்துல் ஜாரியா என்ற தலைப்பிலும் அதே கருப்பொருளில் இந்த மையவாடியின் தேவை பற்றிய தெளிவை/விளக்கத்தை பெண்களுக்கு வழங்க விஷேட பயான் நிகழ்ச்சி ஒன்றையும் எதிர்வரும் சனிக்கிழமை (01-02-2025) ஜாமிவுல் கைராத் ஜும்மா பள்ளிவாசலில் நடாத்த ஒழுங்குகள் செய்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.
எனவே இந்த செய்தியை பார்க்கும் கேள்விப்படும் அனைவரும் தன்னால் முடிந்த உதவிகளை வழங்கி பங்காளிகளாகி அல்லாஹ்விடத்தில் நிரந்தர நன்மையை பெற்றுக்கொள்ளக் கூடியதொரு அறிய சந்தர்ப்பமாகும்.
எமது இந்த முயற்சியை எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் பொருந்திக்கொண்டு தடங்களின்றி நிறைவேற அருள்புரிவானாக!
ஜசாக்கல்லாஹு கைரன்!
▪️மையவாடி project க்கான பிரத்தியேக BANK A/C,
Account name:
JAMIUL KHAIRATH JUMMAH MOSQUE
Account no: 0010405425002
Bank: amana
Branch: katugastota
Contact Details ;
President :
Alhaj W.M. Najeem – 0773524192
Secretary :
Mr. M.M. Naseer – 0766312627
Treasurer :
Mr. M.M. Rismy – 0777161865
தலைவர்,
JAMIUL KHAIRATH JUMMAH MOSQUE.





மையவாடிக்கான நிதி சேகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்





