News
முஸ்லிம்களின் மார்க்க (ரமழான் நோன்பு) கடமைக்காக ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள பேரீச்சம் பழத்திற்கும் வரிச்சலுகை தருவோம் என அரசு தெரிவிப்பு

பேரீச்சம் பழத்துக்கான விஷேட வர்த்தக வரி 200 ரூபாவிலிருந்து கிலோவிற்கு 1 ரூபாவாக குறைக்கப்பட்டதும் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டும் அறிந்ததே
இந்நிலையில், முஸ்லீம்களின் மார்க்க (ரமழான் நோன்பு) கடமைக்கு தேவையான பேரித்தம் பழத்துக்கான வரியை அரசு குறைக்க முடிவெடுத்துள்ளது. அது தொடர்பான அமைச்சரவை தீர்மானமும் எடுக்கப்பட்டது.
அத்துடன் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம் பழத்திற்கு வரி செலுத்தப்பட்டு இருந்தாலும் நாம் அதற்கும் வரிச் சலுகை தருவோம் என இன்றைய அமைச்சரவை தீர்மானத்தில் அமைச்சரவை பேச்சாளர் Dr. நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


