News
வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலய இல்ல விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்.

மமா/க/தெனு/ வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலய இல்ல விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்.
வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைறூஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
Exilion indoor sports மற்றும் Udayakanda Tea Factory நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தொழிலதிபர்.அல்ஹாஜ் வாபிக் உடையார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் மகீஸா நிறுவனத்தின் கல்வி பிரிவிற்கான பணிப்பாளர் திருவாளர்.ஹென்றி சேர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் எஸ்.எம்.ஸாஹிர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பாடசாலையின் பழைய மாணவ உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











