News

ஜனாதிபதியும், சி.ஐ.டியினரும் முட்டாள்கள் என பிள்ளையான் தெரிவிப்பு

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானா, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள  தகவல்கள் குறித்து ஆங்கில நாளிதழ் டெய்லி மிரருக்கு பதில் அளிக்கும்போதே  பிள்ளையான் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது,

உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தர வதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்?

தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ண உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சி.ஐ.டியின் தலைவராக பணியாற்றினார்.

ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள். அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும், ஐ.எஸ். மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான  வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா?

நான் ஆயுதப் போராட்டத்தை விரும்பாததால் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து முதலமைச்சரானேன்.

2015 முதல் 2020 வரை சிறையிலிருந்த ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பேரழிவு தாக்குதலை எவ்வாறு திட்டமிட முடியும்.

ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம்.

நான் சி.ஐ.டியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி போலியான கட்டுக்கதைகளை உருவாக்கியமைக்காக ஆசாத்மௌலானவை கைதுசெய்ய உதவுவேன் என தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button