ஒன்றரை சகாப்தகால சேவையிலிருந்து காத்த நகர் எம்.பி. அப்துல் அஸீஸ் ஓய்வு : முஸ்லிம் மஜ்லிஸினால் பிரியாவிடை, கௌரவிப்பு

மீராவோடை யாஸீன்
காத்த மண்ணை பிறப்பிடமாகக்கொண்ட எம்.பி. அப்துல் அஸீஸ் சுமார் ஒன்றரை சகாப்த காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக மக்களுக்கும், நாட்டுக்கும் மிகவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி கடந்த 29.01.2025ம் திகதி தனது 60வது வயதில் ஓய்வுபெற்றுச் சென்றார்.
அவரைக் கௌரவிக்முகமாக வைத்தியசாலை முஸ்லிம் மஜ்லிஸ் நிருவாகத்தின் ஏற்பாட்டில் நேற்று 06.02.2025 ம் திகதி பி.ப.1 மணியலவில் வைத்தியசாலை பள்ளிவாயலில் விஷேட நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாக வைத்தியசாலை பள்ளிவாயல் தலைவர் ரைசுல் ஹக், வைத்தியசாலை மேற்பார்வையாளர் திரு.வெற்றிக்குமரன் மற்றும் பள்ளிவாயல் நிருவாகிகள், தாதியர்கள், முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு, ஓய்வுபெற்றுச்செல்லும் எம்.பி.அப்துல் அஸீஸ் அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்திக்கௌரவிக்கப்பட்டதுடன் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.



