தாம் அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன மறுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகத் திலகரத்ன, தான் தற்போது தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும், தனது தனிப்பட்ட பணத்தில் தான் இந்த பயணத்திற்கு நிதியளித்ததாகவும் தெளிவுபடுத்தினார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுகத் திலகரத்னவும் அவரது குடும்பத்தினரும் நிரந்தரமாக அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டதை அடுத்து அவரது பதில் வந்துள்ளது
அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன மறுத்தார்.
