News

பிரதமர் ஹரிணியை ராஜினாமா செய்யுமாறு வேண்டுகோள்.

பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என சங்கைக்குறிய அக்மீமன தயாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும் அந்நியப்படுத்துவதற்கும் USAID-ல் இருந்து பணம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட USAID பணமோசடி செய்ததாகக் கூறப்படும் பட்டியலில் தற்போதைய பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரியவின் பெயரும் இருப்பதாக அவர் கூறுகிறார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

இலங்கையில் ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்துவதற்கு பிரதமரும் ஒரு குழுவினரும் பயன்படுத்தப்பட்டதாக சமூகத்தில் கருத்து நிலவியதாகவும், அந்த வகையில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தற்போது வெளியாகியுள்ள தகவல்களால் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button