Site icon Madawala News

“அமெரிக்கா காசா பகுதியைக் பொறுப்பேற்ற பின்னர் அங்கு பலஸ்தீனர்கள் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்”

அமெரிக்கா காசா பகுதியைக் பொறுப்பேற்ற பின்னர் அங்கு பலஸ்தீனர்கள் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

பொக்ஸ் செய்தி சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

“காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் காசாவில் உள்ள வெடிக்காத ஆபத்தான அனைத்து குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பேற்போம்” எனவும் அவர் கூறினார்.

காசாவை தனது கட்டுப்பாட்டில் எடுக்கப்போவதாக கடந்த வாரத்தில் அறிவித்த டிரம்ப், தற்போது பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசாவில் குடியேற உரிமையில்லை என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

ஒரு பொக்ஸ். நிறுவனத்துக்கு பேட்டி அளித்தபோது,

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அந்தப் பகுதிக்குத் திரும்ப உரிமை உள்ளதா என்று கேட்கப்பட்டது. ”அரபு நாடுகள், குறிப்பாக அமெரிக்க நட்பு நாடுகளான ஜோர்டான் மற்றும் எகிப்து, காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழைத்துச் செல்ல அழுத்தம் கொடுத்து வருவதால் இது நடந்து வருகிறது.

”நாங்கள் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவோம், அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சிறிது தொலைவில், ”இடைக்கால” காலத்திற்கு மட்டுமே பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து இடம்பெயர அனுமதிப்போம். அவர்கள் மீண்டும் காசாவில் குடியேற உரிமையில்லை.” என்று டிரம்ப் கூறினார்.

Exit mobile version