News

கண்டி ரயில் நிலைய சமிக்ஞை அறையை பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிளுக்கு சுற்றிக்காட்டிய சமிக்ஞை அறை ஊழியர் பணி நீக்கம்

கண்டி ரயில் நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை இன்று (12) பணி நீக்கம் செய்ய ரயில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.



அனுமதியின்றி வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பெற்று மேற்படி அறையை காண்பித்ததாக அவ்வதிகாரிமீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வௌிநபர்களுக்கு தடை செய்யப்பட்ட இவ் அறையில் சுற்றுலா பயணிகள் அனுமதியின்றி உள்நுழைந்தமை தொடர்பாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.



ரயில் பாதுகாப்பு பிரிவினால் மேற்படி விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button