News
ஆட்சியை கவிழ்க்க முடியாது.. அடுத்த 15 ஆண்டுகளுக்கு நாட்டை திசைகாட்டி ஆட்சி செய்யும்..

எதிர்வரும் 15 வருடங்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே இந்த நாட்டை ஆட்சி செய்யும்
என வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் கூறுகிறார்.
மத்திய வங்கியை உடைத்ததாக எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாத தமது அரசாங்கத்தை சிறு சிறு பிரழ்சினைகள் மூலம் அசைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர்,
எதிர்வரும் 15 வருடங்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே இந்த நாட்டை ஆட்சி செய்யும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்றில் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் பட்ஜெட் ஆவணத்தை இம்முறை தனது அரசு தாக்கல் செய்கிறது என்று டி.பி. சரத் குறிப்பிடுகிறார்.

