இன்று (18) நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தேனீரின் விலை 5 ரூபாவாலும், பால் தேனீரின் விலை 10 ரூபாவாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலை 30 ரூபாவாலும், சிற்றுண்டி வகைகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும் இம்முறை பட்ஜெட்டில் உணவகங்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என்பதாலும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
இன்று நள்ளிரவு முதல் கொத்து, பிரைட் ரைஸ், பால் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு
