ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை !

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இஸ்லாம் மதத்திற்கு அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.
இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை பரிசீலித்து, வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பை அறிவிக்கும் வரை பிணை வழங்குமாறு கோரி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜனவரி 09, 2025 அன்று, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கலகொட அத்தே ஞானசார தேரர், இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில் 09 மாத சிறைத்தண்டனை.
தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, 2000 ரூபா அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கிருலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை ஒழிக்க வேண்டும்” என இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டதாக குற்றவியல் சட்டத்தின் 291ஆவது பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.

