News
பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. விசாரணைகள் ஆரம்பம்..

பொலன்னறுவையில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்று தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலையானது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்து வருவதாகவும்,இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அரிசி ஆலை கட்டுவதற்காக 15 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளதாகவும், அந்த கடனில் விவசாயிகளிடம் இருந்து அரிசியை பறிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


