News
எத்தனை முறை விசாரணைக்கு அழைத்தாலும் வருவோம் ; நாமல்

தங்களை எத்தனை தடவை விசாரணைக்கு அழைத்தாலும் வருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
இன்று சீ ஐ டிக்கு வாக்குமுலம் அளிக்க வந்த போது ஊடகவியலாளர்களுக்கு பதில் அளித்தபோது அவர் இதனை கூறினார்.
எம்மை விசாரணை செய்வதன் மூலமே இவர்கள் கூறிய பொய்கள் மக்களுக்கு புலப்படும் என கூறிய அவர் ஆட்சியாளர்களின் இயலாமையை மறைக்க ராஜபக்ஷக்கள் மீது பழிபோடுவதாகவும் குறிப்பிட்டார்.
ராஜபக்ஷக்கள் மீது பழிபோட்டு ஆட்சிக்கு வந்த அரசு தற்போது ஆளும் தரப்பு என்பதை மறந்து மீண்டும் பழிபோட்டு ஆட்சியை கொண்டு செல்ல முயற்சிக்கிறது என கூறினார்.


