News

இலங்கையில் வசதி குறைந்த மூவின பாடசாலைகளினதும் வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக தனது குடும்ப சொந்த நிதியில் 100 கோடி ரூபாய்களை ஒதுக்கி உள்ளதாக பாத்திமா சலீம் தெரிவிப்பு

(அஷ்ரப் ஏ சமத் )

இலங்கையில் உள்ள அரச பாடசாலைகள் பௌதீக வசதி குறைந்த பாடசாலைகளின் வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக எனது குடும்ப சொந்த நிதி 100 கோடி ரூபாய்களை துபாய் சயிதா பவுண்டேஷன் ஊடாக ஒதுக்கியுள்ளோம். இத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான இலங்கைக்கு பொறுப்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பிணர் நவ்சர் பௌசி முன்னெடுத்துச் செல்வோம்.

துபாயிலிருந்து 15 பாடசாலைகளுக்கான நிர்மாணப்பணிகள் திறந்து வைப்பதற்காக துபாயில் இருந்து வந்த பேராசிரியர் கலாநிதி பாத்திமா சலீம் தெரிவிப்பு.


கடந்த ஞாயிறு 23,திங்கட்கிழமை 24 இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு சயிதா பவுண்டேசனின் கவுன்சில் உறுப்பிணர் கலாநிதி பாத்திமா சலீம் மற்றும் அவரது கணவர் அதில் ஆகியோர்கள் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி மற்றும் நவ்சர் பௌசி ஆகியோர்களுடன் இதுவரை இலங்கையில் மூவினங்களையும் சேர்ந்த 40 அரச பாடசாலைகளுக்கு 100 கோடி ரூபா செலவில் வகுப்பறை கட்டிடங்கள் நிர்மாணம், பாடசாலைகள் புனர்நிர்மாணம், கூட்ட மண்டபம், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், பாடசாலையின் முன் தோற்றம் சுவர் வடிவமைப்பு என பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அபிவிருத்தி செய்கின்றனர்.

இதுவரை 20 பாடசாலைகளுக்கு அபிவிருத்தித் திட்டங்கள் திறந்து வைத்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன. அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொடை கைரியா பாடசாலை, கொழும்பு பாத்திமா பெண்கள் கல்லூரி, கேமா பாலிகா, சென் அந்தனிஸ் தமிழ், கொள்ளுப்பிட்டி, சங்கராசா கல்லூரி, மட்டக்குழி சேர் ராசிக் பரீட், முகத்துவாரம், ஹம்சா கல்லூரி, பதியுதீன் கல்லூரி, சென் செபஸ்தியன்,சென் அந்தனிஸ் மட்டக்குழி, மகாபோதி, கலைமகள் கல்லூரி, சகல அபிவிருத்திகளும் திறந்து வைக்கப்பட்டு மாணவ சமூகத்தின் கையளிக்கப்பட்டது.

அத்துடன் புதிதாக புளுமெண்டால் வித்தியாலயம், மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரிகளுக்கு புதிதாக இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடங்களுக்கு சயீடா பவுண்டேஷன் நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இதற்கு மேலாக புத்தளம் மாவட்டத்தில் உப்போடை கிருஷ்ணா பாடசாலை,பத்தள சிங்கள பாடசாலை மற்றும் தாரக்குடிவில்லு மா.வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளில் அபிவிருத்தித் திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.


இங்கு உரையாற்றிய பேராசிரியை பாத்திமா சலீம் தனது தந்தை சலீம் கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி பாடசாைலையில் 2ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர். எனது தாய் பாத்திமா கொழும்பு புளுமெண்டால் கல்லூரியில் 8 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றவர் அவர்கள் 50 வருடங்களுக்கு மேல் துபாயில் சென்று அங்கு வியாபாரம் செய்து தற்பொழுது துபாய் நாட்டில் முதல் தர பேரிச்சம் பழம் உற்பத்தி செய்து கம்பெனி, துபாயிலிருந்து உலக நாடுகளுக்கு பேரிச்சம் பழம் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக எமது கம்பெனி விளங்குகின்றது. அந்த நாட்டில் எனது தந்தை ஆரம்பித்த கம்பெனி சிறந்து விளங்குவது இந்த நாட்டின் குடியுரிமை கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. அவரது 5 பிள்ளைகளில் நான் கனடா பல்கலைக்கழகம், துபாய் பெட்ரோலியம் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று தற்போது துபாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் எனது இன்னும் ஒரு சகோதரி வைத்தியர் இளைய சகோதரி அந்த நாட்டில் கோல்ப் விளையாட்டில் சாதனை படைத்துள்ளார். அந்த நாட்டுக்கு பெயரை பெற்றுக் கொடுத்துள்ளார். எனது தந்தை எங்களை சிறப்பாக கல்விக்காக அர்ப்பணித்து அவரது கம்பனியும் நாங்கள் உதவி வருகிறோம்.

ஆகவே தான் எனது தந்தையும் எனது குடும்பங்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட சயீடா திட்டங்கள் இலங்கையில் எனது உறவினரான நவ்சர் பௌசி ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எங்களது விருப்பம் அரச பாடசாலைகளுக்கு இவ் அபிவிருத்தி செய்வது கல்வியில் இலங்கையில் உள்ள சகல மத பிள்ளைகளும் முன்னேற வேண்டும். இன,மத நிற மொழி களுக்கு அப்பால் சகல சமூகங்களும் பாடசாலைகளுக்கும் எங்கள் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனது தாய் ; கல்வி கற்ற கொழும்பு புளுமெண்டால் பாடசாலையில் இரண்டு மாடி வகுப்பறைக்கட்டிடங்கை நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து பரிதா கட்டம் என பெயரிடப்படும். எனவும் பாத்திமா சலீம் தெரிவித்தார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button