News
சர்வதேச தாய்மொழி தினப் போட்டியில் முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி எம்.எம்.எப். அஸ்கா இரண்டாம் இடம்

இந்த வருடத்திற்கான-(2025) சர்வதேச தாய்மொழி தினம்
நிகழ்வினை அனுசரிக்கும் வகையில், அகில இலங்கை ரீதியாக பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் புத்தளம், கல்பிட்டி/ ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி
எம்.எம்.எப். அஸ்கா இரண்டாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இப்பபோட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கெளரவ பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில், பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது ஆலங்குடா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி எம்.எம்.எப். அஸ்கா பிரதமரிடமிருந்து பரிசிலையும், சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.

