News

மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் –  எம்கல்வி.lk  (emkalvi.lk) தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான புதிய கல்விசார் இணையதளம் அறிமுகம்.

எம்கல்வி.lk ( emkalvi.lk ) : தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான புதிய கல்விசார் இணையதளம் அறிமுகம்.

இன்றைய நவீன உலகில், டிஜிட்டல் தொழில்நுட்பம் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு சக்திவாய்ந்த வளமாக அமைந்துள்ளது. மாணவர்கள் தமது கல்விசார் விடயங்களை ஈடுபாட்டுடன் கற்பதற்கு தேவையான நவீன இணையதளம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையை உணர்ந்து, emkalvi.lk என்ற புதிய இணையதளம் உருவாக்கப்படுள்ளது.
தரம் 1 முதல் உயர்தரம் வரையான‌ மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வளங்களை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

emkalvi.lk இன் விஷேட அம்சமாக, ஒவ்வொரு பாடமும் அலகுவாரியாக வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்புகளுக்குமான பாட நூல்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி போன்றவற்றையும் இலகுவாக பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு அலகுக்குமான  ஆன்லைன் பயிற்சிகள், மாதிரி வினாக்கள் மற்றும் கடந்த கால வினாக்கள் ஆகியன காணப்படுகின்றன. இப்பயிற்சிகள் உடனுக்குடன் விடைகளை சரிபார்க்கும்   வகையில் நவீன முறையில் வடிவமைக்ப் பட்டுள்ளதால் மாணவர்கள் விருப்பத்துடன் பயிற்சிகளில் ஈடுபடலாம். மேலும் உடனடி முடிவுகள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான கேள்விகளுக்கு மேலதிக விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளதால் இது மாணவர்களின் புரிதலை மேலும் மேம்படுத்தும்.

emkalvi.lk இணையதளம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் தங்களுடைய பாடங்களின் ஆசிரியர் வழிகாட்டிகளை அலகுரீதியாக எளிதில் பார்வையிடுவதற்கும், மாதிரி வினாக்கள் மற்றும் கடந்த கால வினாக்களின் பயிற்சிகளை இலகுவாக மாணவர்களுக்கு Smart வகுப்புக்களில் காட்சிப்படுத்துவதற்குமான வசதிகளை இத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இணைய விளம்பரங்கள் எதுவும் தோன்றாத வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் எந்த இடர்களும் இல்லாமல் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியும்.

இலாப நோக்கமின்றி செயற்படும் இத்தளம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்புகளுடன் தொடர்ச்சியான சேவையை வழங்கக் காத்திருக்கிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button