News
VIDEO இணைப்பு > தனியார் பஸ்ஸை நிறுத்தி கப்பம் கேட்கும் நபர்கள் தொடர்பில் வீடியோ வெளியானது.

தனியார் பேருந்திற்கு இடையூறாக காரில் வந்த இருவர், அந்த பஸ் ரூட்டில் பஸ்சை இயக்குவதற்காக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் மிரட்டல் விடுத்து கப்பம் கேட்டதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பதிவு செய்த சம்பவம், காரில் இருந்து ஒருவர் பேருந்தில் ஏறியதும், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டி, பின்னர் அவர்களைத் தாக்க முயன்றதைக் காட்டுகிறது.
மஹியங்கனையிலிருந்து தனமல்வில நோக்கி பயணித்த பஸ்ஸே வெல்லவாய பகுதியில் வைத்து இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



