News

மாவடிப்பள்ளியில் தொடர்ச்சியாக நடந்தேறும் களவு சம்பவங்கள் –
கள்வர்களை தேடும் பணி தீவிரம்..

( முஹம்மத் மர்ஷாத் )

காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் 4 1/2 பவுன் தங்க நகை, பத்தாயிரம் ரூபாய் பணம் காணாமல் போய் உள்ளதாக (28) திகதி போலீசாருக்கு முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது.

இந் நிலையில் குறித்த காணாமல் போன நகைகள் அடங்கிய வீடானது காரைதீவு போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேச வீடு என்பதும் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.

மற்றும் இத் திருட்டுச் சம்பவமானது நேற்றைய கடந்த 2025-02-27 திகதி இரவு இடம் பெற்றுள்ளது.

(27) திகதி குறித்த வீட்டின் உரிமையாளர்கள் சாய்ந்தமருது சென்று வந்து உறங்கிக் கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில் சூட்சுவமான முறையில் நுழைந்த கள்வர்களினால் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மற்றும் குறித்த வீட்டின் உரிமையாளர்கள் கடந்த (27) திகதி மாமியார் வீட்டுக்கு குடும்பத்தார்கள் அனைவரும் சாய்ந்தமருது பிரதேசத்தில் சென்று சுமார் இரவு 10 மணி அளவில் மீண்டும் வீட்டை வந்தடைந்தவர்கள் குடும்பத்தினர் அதிகாலை எழுந்து ஒருவரின் கையடக்க தொலைபேசி ஒன்றினை காணவில்லை என்று அதனைத் தேடிய பொழுதே நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரியும் மற்றும் குறித்த அறையின் கதவும் திறந்த நிலையில் காணப்பட்டதாகவும், வீட்டின் மேல் மாடியில் இருக்கும் சிரிய கதவு கழட்டபட்டு உள் நுழைந்து சென்றுள்ளார்கள் கள்ளர்கள் என்ற சந்தேகமும் அவ்வீட்டார்களுக்கு எழுந்துள்ளது.

இதன் பின்னரே குறித்த நகைகளை பரிசோதித்த போது 4 1/2 பவுன் தங்க நகைகள் , பத்தாயிரம் ரூபாய் பணம் காணாமல் போய் உள்ளதாக குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தத நிலையில் உடனடியாக போலீசாருக்கு குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளனர் குடும்பத்தினர்.

இதனை அடுத்து போலீஸ் பிரிவினரும் குறித்த திருடு போன நகைகளை மீட்டெடுக்கும் விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் அதே தொடர்ந்து பொலிஸார் மக்களை இரவு நேரங்களில் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டு கொள்வதோடு.

குறித்த குடும்பத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரோ அல்லது ரகசியமாக நுழைந்த நபர் ஒருவரினாலே திருட்டு சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என போலீசார் தற்போது சந்தேகித்து வருகின்றனர்.

மற்றும் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக காரைதீவு குற்றத்தடுப்பு பிரிவும் போலீஸ் பிரிவும் ஆரம்பகட்ட விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button