News

ஆட்சியை வீழ்த்துவோம் என்பது ஒரு கனவு மட்டுமே, அது நடக்காது – ஜனாதிபதி அநுர

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் ஆதரவளிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு அறிக்கை இன்று (28) அந்த நிதியத்தின் நிர்வாக சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று (28) பிற்பகல் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, தற்போது விசேட உரையொன்றை ஆற்றி வருகிறார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

இதன் மூலம் நல்லதொரு பலன் கிடைக்கும் என தான் நம்புவதாகவும், பொருளாதாரம் மிகவும் வலுவான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

“நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் என்றால், பொருளாதார நெருக்கடி மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என்று.

அது தற்போது முடிந்துவிட்டது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் ஆட்சிகள் கவிழ்ந்துள்ளன.

பொருளாதார நெருக்கடியால் ஆட்சியை வீழ்த்துவோம் என்பது ஒரு கனவு மட்டுமே. அது நடக்காது.”

Recent Articles

Back to top button