News
3% கமிஷன் குறைந்தால் பெட்ரோல் விலை 9 ரூபாவால் குறைய வேண்டும் ! பொய்யை செய்ய வேண்டாம் ..

எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கபடும் கமிஷனை 3 வீதத்தால் குறைத்தால் பெற்றோல் லீட்டருக்கு 9 ரூபா குறைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரொஷான் ரனசிங்க குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகத்தர்களுக்கு கிடைக்கும் கமிஷனையும் பொக்கட்டில் போட்டுக்கொள்ள எடுக்கும் முயற்சியாகவே இதை பார்க்கவேண்டும் என அவர் கூறினார்.
அரசாங்கம் தமது பொய்யை நிறுத்த வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

