நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்களில் திடீர் சுகாதார பரிசோதனை.

பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் விசேடமாக ரமழான் காலத்தில் வழங்கப்படும் நோன்புக்கஞ்சி இன்று( 03 ) திடீர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்
இதன் போது நோன்பு கஞ்சி தயாரித்தல் , விநியோகித்தல் என்பனவற்றில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தெளிவூட்டப்பட்டதுடன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் என்பனவற்றில் சூடான கஞ்சி விநியோகிப்பதனால் ஏற்படும் உடற் பாதிப்புகள் சம்மந்தமான அறிவுரைகளும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
—
Thanks & Best Regards,
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්යවේදී
FAROOK SIHAN(SSHASSAN)
B. F .A (Hons)Diploma-in-journalism(University of Jaffna )
0779008012-(URGENT)
sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com,sihanfarook@hotmail.com
0719219055,0712320725,0754548445

