வரவு செலவு திட்டத்தில் ஊழியர்களின் கொடுப்பனவு குறைப்பை கண்டித்து பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் போராட்டம்

அரசாங்கத்தினால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்மொழியபட்டுள்ள வரவு செலவுத் திட்ட தொடர்பில் பல்கலைக்கழக கல்விசாரா அணியினருக்கு ஏற்பட்டுள்ள அநீதியாகும். ஆகவே, அதனை விரைவாக திருத்தியமைக்கும் வகையில் எட்டு வகையான கோரிகையினை முன்வைத்து பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று (4) செவ்வாய்க்கிழமை கண்டி, கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் புதலைவர்,டி.ஏ.டி. சுரஞ்சீவ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் ஏந்தியதுடன் கடவுட்களும் தொங்கவிடப்பட்டன .
நேற்றைய ஆர்ப்பாட்டம் தொடர்பாக குறித்த பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர், வே. கிருஷ்ணமூர்த்தி, ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்
MCA கொடுப்பனவு குறைக்கப்பட்டமை, இதுவரை வழங்கப்பட்ட 20% விசேட கொடுப்பனூர் முழுமையாக நீக்கப்பட்டமை, மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைப்பு, அரச சேவைக்கும் பல்கலைக்கழக சேவைக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தல், UGC 14/2024 சுற்றறிக்கையை ரத்து செய்தல், கல்விசாரா ஊழியர்களின் புதிய நியமனங்கள் மேற்கொள்ளல், இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை கலந்துரையாட வாய்ப்பு வழங்காமை போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்பதாகவும் செயலாளர் வலியுறுத்தினார்.






