இருக்கும் அனைத்து வரிகைளையும் அறவிடுங்கள்..

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இலக்கு வருவாயை இவ்வருடம் பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உத்திகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கிடைக்காத வருமானத்தைப் பெறுவதற்கு தற்போதைய முறைமைக்கு மாறாக தலையீடு தேவை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறவிடப்பட வேண்டிய முழு வரி வருமானத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் ஆர்.ஜி.எச். திருமதி பெர்னாண்டோ உட்பட உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

