நோன்பு நோற்காமல் கிரிக்கட் விளையாடிய மொஹமட் ஷமிக்கு முஸ்லிம் ஜமாத் தலைவர் கண்டனம் ..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நோன்பு இருக்கவில்லை என்று முஸ்லிம் மதகுரு ஒருவர் விமர்சித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியா இந்தியா இடையே இடம்பெற்ற போட்டியில் ஷமி விளையாடிய போது நோன்பு நோற்கவில்லை.
மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, நோன்பை தவிர்த்ததற்காக ஷமியை “குற்றவாளி” என்று குறிப்பிட்டார்., அது ஒரு பாவம் என்றும், மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் கூறினார்.
வீடியோ அறிக்கையில் ஷமியின் செயலுக்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேயில்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, “இஸ்லாத்தில், நோன்பு ஒரு கடமை… யாராவது வேண்டுமென்றே நோன்பைத் தவிர்த்தால், அவர்கள் பாவிகள். கிரிக்கெட் வீரர் முகமது ஷமியும் நோன்பு இருக்கவில்லை; அவர் ஒரு பாவம் செய்தார். அவர் ஒரு குற்றவாளி” என்று கூறினார்.
கட்டாயக் கடமைகளில் ஒன்று நோன்பு ஆரோக்கியமான ஆணோ, பெண்ணோ நோன்பை கடைப்பிடிக்காவிட்டால் பெரிய குற்றவாளியாகிவிடுவார்கள்…இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி போட்டியின் போது தண்ணீர் அல்லது வேறு ஏதாவது பானங்களை அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் விளையாடுகிறார் என்றால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம் என கூறியுள்ளார்.

