News

எனது பேச்சு படி நடக்காவிட்டால் ஹமாஸில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள்..

சிறைபிடித்திருக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப்,

“உடனடியாக பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் ஹமாஸுக்கு முடிவு கட்டப்படும்” என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யத் தயாராக இருப்பதாகவும் உயிருடன் இருக்கும் பிணைக்கைதிகள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும் என்றும் காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது எச்சரிக்கையின்படி நடக்காவிட்டால் ஹமாஸில் ஒருவர் கூட உயிருடன் இருக்க முடியாது என்றும் டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். R

Recent Articles

Back to top button