Site icon Madawala News

பொலிஸ் அதிகாரியை இலஞ்சம் பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்திய தம்பதி  – இலஞ்சத்தை உதறிவிட்டு தம்பதியை கைது செய்த பொலிஸ் அதிகாரி #இலங்கை

நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற தம்பதி, அதே நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாக நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸ் தெரிவித்துள்ளது.

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் நடந்த இரண்டு கால்நடை திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டபோது, அந்தச் சம்பவம் தொடர்பாக நிவாரணம் பெறுவதற்காக அவர் பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக நிக்கவெரட்டிய பொலியார் தெரிவிக்கின்றனர்.

கிரியுல்லா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், பொலிஸ் அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு இலஞ்சம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டு வற்புறுத்தி வந்ததாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version