காஸா பகுதிக்கான மின்சாரத்தை துண்டித்த இஸ்ரேல்

இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் எலி கோஹன், காசா பகுதிக்கான மின்சார விநியோகத்தினை நிறுத்துவாக அறுவித்து தனது எக்ஸ் தளத்தில் “விவாதங்கள் முடிந்துவிட்டன, இப்போது செயல்பட வேண்டிய நேரம் இது” என்று கூறியுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு ரமலான் துவங்கியுள்ள நிலையில்ய் காசா பகுதிக்கு வழங்கப்பட்ட அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் இஸ்ரேலிய அதிகாரிகள் நிறுத்தி வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனவரி 19 ஆம் தேதி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மூன்று கட்டங்களாக பணயக்கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கான அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இஸ்ரேல் ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை நீட்டிக்க விரும்பிய , அதே நேரத்தில் ஹமாஸ் இரு தரப்பினரும் முன்பு ஒப்புக்கொண்டபடி, இரண்டாம் கட்டம் வரை அமைதி ஒப்பந்தத்தைத் தொடர விரும்பியது.
இருப்பினும், இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று (மார்ச் 10) நடைபெறும், இதில் எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகியவை மத்தியஸ்தராக இருக்கும்.
அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கிய இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் குறைந்தது 50,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காசா பகுதியின் பெரும் பகுதிகள் இடிபாடுகளாக மாறின.

