Site icon Madawala News

பயங்கரவாத தாக்கம் மிகக் குறைந்த நாடாக இலங்கை அடையாளப் படுத்தப்பட்டது

பொருளாதார மற்றும் சமாதான நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்காக உலகளாவிய பயங்கரவாத குறியீடு வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையின் பிரகாரம், இலங்கைக்கு  பூச்சிய புள்ளிகளுடன் 100 ஆவது இடமளிக்கப்பட்டுள்துடன் பயங்கரவாத தாக்கம் குறைந்த நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.



உலக சனத்தொகையில் 99.7 மக்கள் தொகையை உள்ளடக்கும் வகையில், 163 நாடுகளை அடிப்படையாக கொண்டு உலகளாவிய பயங்கரவாத குறியீட்டினால் இந்த ஆய்வு  முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்த அறிக்கையின் பிரகாரம், இலங்கை கணிசமாக முன்னேற்றமடைந்துள்ளதுடன் உலகளாவிய பயங்கரவாத குறியீட்டில் ஒரு வருடத்திற்குள் 64 இடங்கள் பின்னடைவை சந்தித்துள்ளதுடன், இந்த தரப்படுத்தல் நாட்டுக்குள் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஏற்படும் அபாயம் குறைந்துள்ளது என்பதைக் சுட்டிக்காட்டுகிறது.

Exit mobile version