Site icon Madawala News

அனுராதபுரத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் சந்தேக நபர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், அவர் கல்னேவ பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை (10) இரவு  பயிற்சி பெற்று வந்த 32 வயது மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி விட்டு தப்பி ஓடிய நபரை  கைது செய்வதற்கு பல பொலிஸ் குழுக்கள் விசாரணையைத் தொடங்கிய நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் மருத்துவரிடமிருந்து திருடிய அலைபேசியைபயன்படுத்தி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்கு முந்தைய நாள் போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக அவர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

Exit mobile version